வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

வாணியம்பாடி, நவ.3-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நத்தர்மா முஹம்மத் நியாஸ். இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் வீட்டுக்கு வெளியே தன்னுடைய இரு சக்கர வாகனம் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று உள்ளார். பின்னர் அன்று மாலை 6 மணி அளவில் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.
பின்னர் அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவு காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி அடிப்படையாகக் கொண்டு நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














Leave a Reply