Categories

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



திருப்பத்தூர் நவ 6,

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி முதல் கன மழை பெய்து வருகிறது இந்த நிலையில் திருப்பத்தூர் அது சுற்று வட்டார பகுதியான நாற்றம்பள்ளி கந்திலி ஜோலார்பேட்டை வாணியம்பாடி ஆம்பூர் போன்ற பகுதிகளிலும் காலை மதுரை கன மழை பெய்து வருகிறது இதனால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர் இந்த நிலையில் திருப்பத்தூரில் நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் கழிவு நீர்கள் செல்வதற்கு போதிய வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பத்தூர் காமராஜ் நகர் பகுதியில் பாதாள சாக்கடை நீர் பொங்கி நீர் வெளியேறுகிறது இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் முகம் சுழித்துக் கொண்டு செல்கின்றனர் திருப்பத்தூர் நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து தூர்வார்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர் மழை வரும்போது எல்லாம் பாதாள சாக்கடை திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அயோதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் உடனடியாக நகராட்சி ஆணையாளர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றன தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது