
மதுக்கரை.நவ.8.
பிலிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும்
தொழில்கள்,தங்களுக்கு கிளினிங் பவுடர் ஆர்டர் செய்து,ஐ போன், லேப்டாப் அனுப்பி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தில் பிலிப்கார்ட் நிறுவனம் செல்லப்பட்டு வருகிறது,இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


இங்கு,வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் பொருட்களை இங்கிருந்து பார்சல் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில்,கடந்த 27.09.2025 ஆம் தேதி கஸ்டமர் ஒருவருக்கு அனுப்பிய சுமார் 7 கிலோ,ரின் வாஷிங் பவுடர்,கஸ்டமர் வாங்க மறுத்ததால் திரும்பி வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த,டீம் லீடர்,
சேது கபிலேஷ் என்பவர்,அதை பிரித்து பார்த்தபோது,அதில் வாஷிங் பவுடருக்கு பதில்,விலை உயர்ந்த லேப்டாப் இருப்பது தெரியவந்தது.


இதனைத்தொடர்ந்து அங்குள்ள பேக்கிங் செக்சனில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது,
பேக்கிங் செக்சனில் பணிபுரியும்,
விக்னேஷ்,கிஷோர் குமார், ஶ்ரீ சஞ்சய், சிரஞ்சீவி, யோகேஷ், ஆஷா,முகமது அலி, அஞ்சலி ஆகியோர்,தாங்களாகவே,தங்கள் முகவரிக்கு,ஆன்லைனில், சோப்பு,கிளினிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை ஆர்டர் செய்து விட்டு, பார்சல் செய்யும்போது,
அதில் கிளினிங் பவுடருக்கு பதில் விலை உயர்ந்த ஐ போன்,லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை பார்சல் செய்து அனுப்பி வைத்தது,மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


இதையடுத்து, பிலிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர் சக்திவேல்(64) என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,வழக்குபதிவு செய்த செட்டிபாளையம் போலீசார்,ஐ போன், லேப்டாப் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 19 பொருட்களை பறிமுதல் செய்து,மோசடியில் ஈடுபட்ட 7 பேர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிலிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள்,தங்களுக்கு கிளினிங் பவுடர் ஆர்டர் செய்து,ஐ போன், லேப்டாப் அனுப்பி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
—————————————-
புட் நோட்.படம் எண்.WA.0006.
பிலிப்கார்ட் நிறுவனத்தில் மோசடி செய்த தொழிலாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்.














Leave a Reply