
கன்னியாகுமரி நவ 8,
கேரளாவில் தமிழகம், கர்நாடக மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆம்னி பேருந்துகளுக்கு லட்சக்கணக்கில் பணம் அபராதம் விதித்த விவகாரம் சம்மந்தமாக கேரள செல்லும் ஆம்னி பேருந்துகள் நேற்றைய தினம் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருவதால் கேரள செல்லும் ஆம்னி பேருந்துகள் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை, படந்தாலுமூடு போன்ற பகுதிகளில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் ஆம்னி பேருந்து பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம். களியக்காவிளை போன்ற பகுதிகளில் இருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் சென்றனர் .ஆம்னி பேருந்துகள் போராட்டம் காரணமாக பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்பட்டு உள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.















Leave a Reply