Categories

கூரல் மீன் வலையில் சிக்கி ரூ.2லட்சத்திற்கு வரை விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி


ராமநாதபுரம் நவ 8,பாம்பன் தென் கடல் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்களுக்கு அடித்த ஜாக்பாட் மருத்துவ குணம் மிக்க இரண்டு கூரல் மீன் வலையில் சிக்கி ரூ. இரண்டு லட்சத்திற்கு வரை விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று மீன் பிடிக்க சென்றுவிட்டு இன்று கரை திரும்பினர்‌. இதில் கார்ல் மார்க்ஸ் என்பவருக்கு செந்தமான விசைப்படகுகில் அரிய வகையைச் சேர்ந்த மருத்துவ குணமிக்க இரண்டு கூரல் மீன் சிக்கியது.



இதில் வயிற்றில் உள்ள காற்றுப்பை என்ற ரப்பர் போன்ற குடல் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும், மருந்துகள் தயாரிக்க  பயன்படுத்துவதாகவும், ஜெல்லி மிட்டாய் போன்றவைகளை சுவையாகவும், கெட்டுப் போகாமலும் இருக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் வியாபாரிகள் போட்டி போட்டு ரூ. 2 லட்சத்திற்கு  வாங்கி சென்றனர்.