
சென்னை, நவ.8
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. 75 அறிவுத் திருவிழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில் முற்போக்கு புத்தகக் காட்சி , காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு நடைபெற்றது. 2 நாட்கள் நடக்கும் விழாவில் கருத்தரங்கம் நடக்கிறது.
தி.மு.க.பவள விழா இளைஞர் அணி `தி.மு.க. 75 அறிவுத் திருவிழா’வாகக் கொண்டாடப்படுகிறது. தி.மு.க. தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டலில் இளைஞர் அணிச்செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டங்கள், சட்டமன்றத் தொகுதி தோறும் கலைஞர் நூலகம், முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம்’, இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து கருத்தியல் பயிற்சி அளிப்பது, கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், கலைஞர் நிதி நல்கை திட்டம் ஆகிய கருத்தியல் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75-–ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இளைஞர் அணி சார்பில் தி.மு.க 75 அறிவுத் திருவிழா என்னும் நிகழ்ச்சியை நடத்துகிறது.
அந்த வகையில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி சார்பில் `தி.மு.க 75 – அறிவுத் திருவிழா என்னும் நிகழ்ச்சி இன்று (நவ.8) காலை தொடங்கியது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் , காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டு, இருவண்ணக்கொடிக்கு வயது 75 என்ற கருத்தரங்கத்தையும் முற்போக்கு புத்தகக் காட்சி’யையும் தொடங்கி வைத்தார். இதில் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட தி.மு.க. வின் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாட்டுத் தளங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், தேசியக் கட்சித் தலைவர்கள், கழகத் தலைவர் உள்ளிட்ட தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய, 1,120 பக்கங்கள் கொண்ட காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்னும் புத்தகம், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் உருவாகியுள்ளது. இந்த ஆவணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கட்சி பொதுச்செயலாளரும் , நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கட்சி முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள், இளைஞர் அணிச் செயலாளரும் , துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் முன்னிலையில் தன்மானம் காக்கும் கழகம் மேடை நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11. 30 மணிக்கு இருவண்ணக் கோடிக்கு வயது 75 என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இதற்கு திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் ரா. தி.சபாபதி மோகன் ஆகியோர் பேசினார்.














Leave a Reply