Categories

திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் தடுப்புச் சுவர் மீது மோதி கார் தீ பிடித்து எரிந்ததில் திருவாரூரைச் சேர்ந்த முகமது ரபிக்  உடல் கருகி உயிரிழப்பு


திருவாரூர் நவ 9,
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தெற்கு. தெருவை சேர்ந்த முகமது ரபீக் என்பவருக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் ஆகிறது.இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் பகுதியில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சொகுசு காரை  அதிவேகமாக ஓட்டிவந்த முகமது ரபீக்  நாகப்பட்டினம்  பைபாஸ் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கார் தூக்கி வீசப்பட்டது.

இந்த நிலையில் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் முழுவதுமாக கார் எரிந்து சாம்பலானது மேலும் காரை ஓட்டிச் சென்ற   முகமது ரபீக் முழுவதுமாக எரிந்து உடல் கருகிய நிலையில் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.