Categories

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா கவியருவி பகுதிகளில் அதிக அளவில் வருகை புரிந்த சுற்றுலா பயணிகள்


பொள்ளாச்சி – நவ- 9

ஆனைமலை அடுத்த ஆழியார் அணை, கவியருவி, வால்பாறை போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ள நிலையில்  ஆழியார் வால்பாறை கவி அருவி போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து.

தற்போது குளிர் காற்று வீசி வீசி வருகிறது மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் காலையிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆழியார் அணை பூங்கா கவியருவி போன்ற பகுதிகளுக்கு வருகை அதிகரித்து காணப்படுவதால்  ஆழியார் அணை. வனத்துறை சோதனை சாவடி பகுதிகளில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர் தற்பொழுது கவியருவில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

இருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருப்பதால் காத்திருந்து  குளித்து செல்கின்றனர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் ஆழியார்  சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உணவகங்களில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.