கோவை நவ 10,
ஒரு வாரத்துக்கு முன்பு கோவை விமான நிலையம் பின் புறம் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த போது ஆண் நண்பரை தாக்கி விட்டு போதை ஆசாமிகள் அவரை தூக்கி கொண்டு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளது.மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது.
பெண்களுக்கு பாதுகாபு இல்லை குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை
காவல் துறையினர் கண்டு அச்சமில்லாமல் குற்றம் புரிபவரக்ள் நடந்து கொள்கின்றனர். திண்டிவனம் பகுதியில் மாணவியை காவலர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.காவல்துறை ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா பாதுகாப்பு அளிக்கிறதா என்ற நிலைதான் இருக்கிறது.சமூக நலத்துறை அமைச்சர் பாலியல் வன்கொடுமை 6995 சிறுமிகள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அதற்கு 104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு இலலாத நிலை இருக்கிறது. போதைபொருள் அதிகரித்துள்ளது போதை ஆசாமிகளால் இந்த சம்பவங்கள் நடக்கின்றன.நிரந்தர டிஜிபி இன்னும் நியமிக்கப்படவில்லை வேண்டப் பட்டவர் வர வேண்டும் என்பதற்காக நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை.
டி.ஜி.பி நியமனத்தில் இந்த அரசு முறையாக விதிகளை பின்பற்ற வில்லை.யு பி எஸ் சி 3 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியும் டி.ஜி.பி நியமனம் செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடரப்பட்டு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.
ஏன் இந்த பாரபட்சம் பார்க்கின்றனர்.
வாக்காளர் திருத்தம் திட்டம் கொண்டு வரப்பட்டு வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
வாக்காளர்கள் பட்டியலில் இறந்தவர்கள் இடமாற்றம் ஆனவர்கள் பெயர்கள் தொடர்கிறது.வாக்காளர் திருத்தம் திட்டம்ஸஎன்றாலே பதறுகிறார்கள் ஏன் பதறுகிறார்கள்.
இதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை.ஒரு மாதம் என்பது போதுமானதாகும்.இறந்தவர்கள் நீக்கப்படக்கூடாது என்பது திமுகவின் நோக்கமாக இருக்கிறது.அப்படி நீக்கம் செய்யப்பட வில்லை என்றால் தேர்தலின் போது திருட்டு ஓட்டு போட வசதியாக இருக்கிறது.கள்ள ஓட்டு போடுவதை தடுக்கப்படும் என்பதால்
அதுதான் இவர்களுக்கு பயம். வாக்குகள் பறிபோகும் என அச்ச உணர்வை மக்கள் மத்தியில் ஏற்ப்படுத்த முயல்கின்றனர்.எனவே திட்டமிட்டே மக்க்க்ஷளை குழம்பு கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.ஈரோட்டில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. எஸ்ஐஆர் என்றால் ஏன் பதறுகின்றார்கள் ஏன் அலறுகின்றார்கள் என கேள்வி எழுப்பினார்.பாக முகவர்கள் தான் படிவங்களை கொடுக்க வேண்டும் வாங்க வேண்டும் ஆளும் கட்சியினர் தலையிடுவதால் உண்மையான வாக்காளர் பட்டியல் உருவாக்க முடியாது.அதிமுகவில் குடும்ப ஆட்சி என யாராவது சொல்லியுள்ளார்கள் ?
செங்கோட்டையன் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்.நிதியே ஒதுக்காமல் தி.மு.க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுக்கின்றனர். என ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.














Leave a Reply