Categories

மீண்டும் மோடியை டாடி என சொன்ன முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நடந்த அதிமுக பாஜக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு பேச்சு

விருதுநகர் நவ 12,

மீண்டும் மோடியை டாடி என சொன்ன கே.டி.ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் அதிமுக  வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.தொடர்ந்து பேசுகையில்:-
புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள  சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.

உங்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை எங்கள் ஐயா. *மோடி எங்கள் டாடி தான் உள்ளார்*.மாணிக்கம் தாகூர் எம்பி-யால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா?
ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை என்றார்