Categories

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றித் திறந்த குரங்கால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவை நவ 12,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய பந்தய சாலை, சிறை வளாகம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது குரங்குகள் தென்படுவது வழக்கம். இந்த நிலையில் மதிய வேளையில் ஆட்சியர் அலுவலக வாகன நிறுத்துமிடம் உள்ள வளாகத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது.

அங்கு உள்ள சிறுதானிய உணவகம் அருகே முகாமிட்ட அந்த குரங்கு சாப்பிட்டு முடித்தவர்கள் போட்ட உணவை உண்பதற்காக இறங்கியது. அங்கு இருந்த கழிவுகள் தொட்டியில் இருந்தவற்றை உண்ட குரங்கு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. திடீரென குரங்கு வந்ததால் உணவருந்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குரங்குகள் கடித்தாலும் உடல் உபாதை ஏற்படும் என்ற நிலை இருப்பதால் வனத்துறையினர் குடியிருப்பு வளாகங்கள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் நடமாடும் குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.