Categories

மனைவியை கொலை செய்த வழக்கில் கோவை அதிமுக பிரமுகர் கவி சரவணன் கைது.

கவி சரவணன்


கோவை நவ 13,
கோவையில்  அ.தி.மு.க பிரமுகரின்  மனைவி மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, விவாகரத்து கொடுக்காத்தால் மனைவியை தனது ஓட்டுனர் மூலம் அதிமுக பிரமுகர் கவி சரவணன் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தடாகம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

கோவையை  அடுத்த பன்னீர்மடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் இருப்பவர் கவிசரவணகுமார். இவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி. இவர்களது  வீட்டில் ஒட்டுனராக பணிபுரிந்த சுரேஷ் என்பவர் பணி புரிந்த சுரேஷ் என்பவர்,
வீட்டில் தனியாக இருந்த மகேஷ்வரியை  கடந்த அக்டோபர் மாதம் 28 ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

மகேஸ்வரி



பின்னர் அதிமுக பிரமுகர்  கவி சரவணகுமாரிடம் சென்று , மகேஸ்வரி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக கூறவே, அவர் ஓட்டுனர் சுரேஷை  வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைய வைத்தார்.
சம்பவம் நடத்த பகுதி தடாகம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால்,
ஓட்டுனர் சுரேசை தடாகம் போலீசாரிம் ஒப்படைத்தனர். இதனையடுத்து தடாகம் போலீசார் மகேஸ்வரியின் உடலை கைபற்றி விசாரணை நடத்திய போது, கவி சரவணன் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதற்கு  நீ தான் காரணம் என திட்டியதால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓட்டுனர் சுரேஷ் 15 ஆண்டுகளுக்கு மேலாக கவி சரவணனிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளதுடன், அவர்கள் வீட்டில் இருக்கும் அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓட்டுநர் சுரேஷ் , மகேஸ்வரியை கொலை செய்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட  ஓட்டுனர் சுரேசை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் திடீர் திருப்பமாக, அதிமுக பிரமுகர் கவி சரவணன் , ஓட்டுனர் சுரேசை வைத்து,  தனது மனைவியை கொலை செய்து இருப்பது  தெரிய வந்தது. அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமாருக்கும் அவரது  மனைவி மகேஸ்வரிக்கும்  இடையே ஒரு வருடத்திற்கு மேலாக பிரச்சனை இருந்து வந்ததாகவும், வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட கவி சரவணக்குமார் வீட்டிற்கு வராமல் தனியாக வீடு எடுத்து தங்கி வந்ததாகவும்,
மனைவி மகேஸ்வரியிடம்  விவாகரத்து  கேட்ட நிலையில், அவர் விவாகரத்து கொடுக்க முன் வராததால் மனைவியை கொல்ல திட்டமிட்ட அதிமுக பிரமுகர் கவி சரவணகுமார், ஓட்டுனர் சுரேஷ் மூலம்  கொலை செய்து விட்டு நாடகமாடி இருப்பதும் தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் கவி சரவணக்குமார்  சொல்லியதன் பேரில் மகேஸ்வரியை கொலை செய்ததாகவும் , கொலை
வழக்கு செலவையும், திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள  கவி சரவணக்குமாருக்கு சொந்தமான
கவி சேம்பரையும் கொடுப்பதாக ,
கவி சரவணகுமார் தெரிவித்ததால் , மகேஸ்வரியை  கொலை செய்ததாகவும்  ஓட்டுனர் சுரேஷ் விசாரணையில்  தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமாரை தடாகம் காவல்துறையினர்  இன்று கைது செய்தனர்.