
கோவை நவ 13,
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மலை அடிவார பகுதிகளான தடாகம், கணுவாய், வரபாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாகவே அதிகரித்து உள்ளது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன அவ்வப்போது வீடுகளிலும் ரேஷன் கடைகளிலும் வைக்கப்பட்டுள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களையும் தின்று செல்கிறது இதனால் அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 12 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் அடுத்த வரப்பாளையம் பகுதியில் சுற்றி வந்தது, பின்னர் அங்குள்ள மனோகர் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது, முன்னதாக அந்த யானை கூட்டம் மனோகர் தோட்டத்திற்குள் வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது அதில் பெரிய யானை மற்றும் குட்டி யானைகள் என 12 யானைகள் உள்ளே வருவதும் அதில் இரு ஆண் யானைகள் விளையாட்டாக சண்டை போட்டுக் கொண்டு இருப்பதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.














Leave a Reply