
கோவை நவ 18,

21 எண் அரசு பேருந்து சாதி தீண்டாமை விவகாரம், போக்குவரத்து துறை செயலர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
21 அரசு பேருந்து மட்டும், சாதிய தீண்டாமை காரணமாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கெம்பனூரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பட்டியிலன மக்கள் வசிக்கும் பகுதியான அண்ணா நகருக்கு இந்த பேருந்து இயக்கப்படுவதில்லை குற்றச்சாட்டு.
பட்டியலின மக்கள் பகுதிக்கு பேருந்தை இயக்கினால், பேருந்து அங்கிருந்து வரும்போது அவர்களுடன் சரிசமமாக அமர்ந்தும், அவர்கள் முன்பு நின்று கொண்டு வர வேண்டுமா என்ற சாதிய நோக்கத்துடன் பேருந்து இயக்க மறுப்பதாக குற்றச்சாட்டு.
ஏற்கனவே, கடந்த மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் மாவட்ட ஆட்சியரை, அண்ணா நகருக்கு செப்டம்பர் 24ம் ேததிக்குள் 21ம் எண் பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிட்டநிலையில், அதனை பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு.
மாறாக போளுவாம்பட்டி செல்லும் 64சி என்ற பேருந்து அண்ணா நகருக்கு இயக்கியும், சாதிய பிரச்னை இல்லை எனவும் அறிக்கை சமர்பித்து இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளர்.
ஆனால், 21 எண் பேருந்தை மட்டும், அண்ணா நகருக்கு இயக்கவில்லை எனவும், பின்புலத்தில் திமுக, அதிமுக அரசியல்வாதிகள் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக இருந்து கொண்டு, முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து 21 எண் பேருந்து இயக்கக்கோரி, அப்பகுதி மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பிய நிலையில், தற்போது கோவை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து செயலருக்கும், தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அப்பகுதி மக்களுக்கு பேருந்து இயக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.















Leave a Reply