
தர்மபுரி டிச 18,
50 ஆண்டுகளாக புகழ்பெற்ற சர்க்கரை ஆலையின் உற்பத்தி சீர்குலைவு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை, தமிழகத்தின் முதன்மை உற்பத்தி நிலையங்களில் ஒன்றாகக் கணிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் 6 லட்சம் டன் கரும்பை அரைத்து 9 மாதங்கள் தொடர்ந்து இயங்கி சாதனை படைத்தாலும், அண்மைக் காலங்களில் ஆலை செயல்திறன் குறைந்து, பெயரளவில் மட்டுமே இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
ஆலையை சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது நெருக்கடியில் உள்ளனர். கரும்பு பதிவு, விதை வழங்கல் மற்றும் கொள்முதல் பணம் தாமதம் போன்ற பிரச்சினைகள் காரணமாக விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
அறுவடை காலம் தாமதப்படுத்தப்படுவதால் கரும்பின் எடை குறைவதும் கூடுதல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக அலட்சியமே முக்கிய காரணம் என தொழிலாளர்கள் குற்றச்சாட்டு
ஆலை நிர்வாகம் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்களை புறக்கணித்து வருவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். இயந்திர கோளாறுகள், அரவை நிறுத்தம், வெல்லபாகு போன்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புகழ் பெற்ற ஆலை மூடல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கரும்பு பற்றாக்குறையால் அரவை பெயரளவில் தொடக்கம்மாவட்ட நிர்வாகம் டிசம்பர் 19 அன்று அரவை பணி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆனால் கையிருப்பில் உள்ள கரும்பு 30 ஆயிரம் டன்களே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினசரி 1,800 டன் கரும்பு தேவைப்படும் நிலையில், இந்த அளவு இரண்டு வாரங்களுக்கும் போதாது என்பதால் அரவைப் பணி பெயரளவில் தொடங்கி, பின்னர் மூடப்படும் அபாயம் இருப்பதாக தொழிலாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
“ஆலை மூடாதே — நிர்வாகம் பதவி விலகு”: தொழிலாளர்கள் சத்தம்
இதனைக் கண்டித்த தொழிலாளர்கள், “ஆலை மூடாதே, செயலற்ற நிர்வாகமே பதவி விலகு” என கோஷமிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாததால், தொழிலாளர்கள் ஆலை வாயிலில் அமர்ந்து தர்ணா நடத்தினர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இணைந்த போராட்டம்இந்தப் போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் திருப்பதி, தொ.மு.சா நிர்வாகிகள் மணி முருகேசுன், ஜம்புலிங்கம், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், கலையரசன் மற்றும் அம்பேத்கர், கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “பாலக்கோடு சர்க்கரை ஆலையை காப்பாற்று” என்ற முழக்கத்துடன் அவர்கள் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தனர்.














Leave a Reply