Categories

மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு  அனைவரும் கடைபிடிப்போம்!

தர்மபுரி டிச 19,

தேசிய மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் “மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கோமகள் தலைமையில் கல்லூரி துணை முதல்வர் உத்திராபதி, செயற்பொறியாளர் முனிராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 முதல் 20 வரை தேசிய மின் சிக்கன வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து பாலக்கோடு மின்பகிர்மான கோட்டத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் ஷோபனாதேவி, சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, கல்லூரி மாணவர்களிடம் மின் சிக்கனத்தின் அவசியம் மற்றும் மின்பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கினர்.

மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, மின்சாரத்தை குறைந்த அளவில் பயன்படுத்துவது உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு உதவுகிறது என்பதை மேற்பார்வை பொறியாளர் கோமகள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

“மின்சாரத்தைச் சேமிப்பது நமது பொறுப்பாக இருக்க வேண்டும்; சிறிய சிக்கனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும்,” என்று பெருமதிப்புடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை கல்லூரி மின்னியல் துறைத் தலைவர் ரவி மேற்கொண்டார். உதவி செயற்பொறியாளர்கள் சங்கர்குமார், மோகன்குமார், சுரேஷ் ஆகியோர், மின்வாரிய பணியாளர்கள், கல்லூரி ஊழியர்கள் மற்றும் பல துறை மாணவர்கள் பங்கேற்றனர்.துறைத் தலைவர் நேதாஜி நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவித்தார்.

மின் சிக்கனம் — உங்கள் கையில்! இன்று தொடங்குங்கள், நாளை பாதுகாப்பாக வாழுங்கள்.