
தர்மபுரி டிச 19,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் ஒன்றியத்துக்குட்பட்ட து.நெருப்பூர் கிராமம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்தத்திராயன் சுவாமி திருக்கோவிலில், மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சந்தனமரக் கடத்தல் வீரப்பன் வழிபட்டதாகக் கூறப்படும் இந்தத் திருக்கோவில், “வீரப்பன் கோவில்” என பக்தர்களிடையே பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி சுயம்புவாக குகைக்குள் உள்ள எப்போதும் வற்றாத ஊற்று நீருக்கிடையில் வவ்வால்கள் சூழ அருள்பாலிக்கிறார்.
மார்கழி அமாவாசை தினத்தையொட்டி இன்று காலை முதல் தொடங்கிய வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வேண்டுதல் வைத்தவர்கள் குழந்தைப் பெற வேண்டி,
பிறந்த குழந்தைகளுடன் வந்து துலாபாரம் செய்து நாணயங்களால் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நல்ல உடல்நலம், சிறந்த கல்வி ஆகிய வேண்டுதல்களும் பரவலாக வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி, முத்தத்திராயன் சுவாமி சிலையை தூக்கி கோவிலைக் சுற்றிவலம் வந்தார். அப்போது பக்தர்கள், சுவாமி சிலை தங்களைத் தாண்டி செல்லும் வகையில் தரையில் படுத்து வழிபட்டனர்.

இதன் மூலம் தீய சக்திகள் விலகும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்து, மொட்டையடித்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மார்கழி மாதத்தின் சிறப்பு நாளில் நடைபெற்ற இந்த வழிபாடு, பக்திபரவசம் மிக்க சூழலில் உற்சாகமாக நடைபெற்றது.














Leave a Reply