
கோவை டிச 20,
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மனவேதனை அடைந்து தற்கொலை செய்துகொண்ட பக்தர் பூர்ணசந்திரனுக்கு கோவையில் இந்து முன்னணியினர் தீபம் ஏற்றி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பை அவமதித்து அதனை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசின் நடவடிக்கையால் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மதுரையில் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிரிழந்தார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமாவாசை நாளில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்த காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள மாவீரன் சசிகுமார் திடலில் இந்து முன்னணியினர் தீபம் ஏற்றி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
அப்போது “வீரவணக்கம், வீரவணக்கம் பூர்ணசந்திரனுக்கு வீரவணக்கம்” என கோஷங்கள் எழுப்பி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட துணைத் தலைவர் மணி, நகர தலைவர் சந்தோஷ், நகரப் பொதுச் செயலாளர் சங்கர், இந்து வியாபாரி சங்கம் ரத்தினபுரி நகர் தலைவர் பல்சர் ராஜன், நகர பொறுப்பாளர்கள் நவீன், மணி உள்ளிட்டோர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














Leave a Reply