
சிவகாசி, டிச. 23.
சிவகாசியில் குடும்பதகராறில் மனைவி, மாமியார், 2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி கணவன் அதிகாலையில் எதித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி முஸ்லிம் ஓடைதெருவில் வசித்து வருபவர் அக்பர் அலி(55). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவிசெய்யது அலி பாத்திமா(40) இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவனை இழந்துள்ளார். செய்யது அலி பாத்திமாவின் முதல் கணவனுக்கு பர்வின்பானு(18) என்ற மகளும், செய்யது பரூக் (16) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் செய்யது அலி பாத்திமாவை இரண்டாவதாக அக்பர் அலி திருமணம் முடித்துள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி கும்பசண்டை நடந்து வந்துள்ளது. செய்யது அலி பாத்திமாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில், அவரது நடத்தையிலும் அக்பர் அலி சந்தேகப்பட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அக்பர் அலி மனைவி செய்யது அலிபாத்திமாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரில் அக்பர் அலி போலிசாரால் கைது செய்யபட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் விபத்தில் இறந்து போன செய்யது அலி பாத்திமாவி்ன் முதல்கணவனுக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு தொகை வந்துள்ளது. அந்த பணத்தை தன்னிடம் தருமாறு செய்யது அலி பாத்திமாவிடம் தகராறு செய்துள்ளார். அவர் பணத்தை தர மறுத்ததால் அத்திரமடைந்த அக்பர் அலி நேற்று அதிகாலை செய்யது அலிபாத்திமா, பர்வின்பானு, செய்யது பரூக் மற்றும் செய்யது அலி பாத்திமாவின் தாயார் சிக்கந்தர் பீவி(65) ஆகியோர் மீது ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் அக்பர் அலி மீதும் தீ பற்றியது. அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசார், மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து அவா்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதித்தனர். இதில் செய்யது அலி பாத்திமா, பர்வின் பானு, சிக்கந்தர் பீவி, அக்பர் அலி ஆகியோர் 90 சதவீத தீககாயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளனர். இச்சம்பவர் குறித்து சிவகாசி டவுண் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சிவகாசியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply