
கோவை டிச 23,
கோவை அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த நான்கு தினங்களாக இரவு, பகலாக காத்து இருப்பு போராட்டத்தில் வருகின்றனர். இன்று 5-வது நாளாக தொடரும் போராட்டத்தில் அவர்களது கைகளும், கண்களும் கட்டப்பட்டு விட்டதாக கூறி கருப்புத் துணிகளால் கட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், செவிலியர்கள் தேர்தல் காலத்தில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததும், அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைத்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக இரவு, பகல் பனியில் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் 700 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அரசு தரப்பில் கூறியதாகவும், ஆனால் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக இன்று நடைபெறும் போராட்டத்தில் கருப்பு துணிகளை கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்டதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது..














Leave a Reply