
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இதில் 6-ஆம் வார்டு கவுன்சிலர் ஹாஜிராபி, 13ஆம் வார்டு கவுன்சிலர் ஜபியுல்லா ஆகியோர், பேரூராட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து வெளிப்படையாகக் கூறி வருகிறார்கள்.
தற்போது திமுக சார்பில் பேரூராட்சி தலைவராக பணியாற்றுபவர் பிருந்தாநடராஜ் மற்றும் செயல் அலுவலர் ஆயிஷா.

இவர்கள் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்காமல், பல்வேறு அரசு திட்டங்களின் பெயரில் போலியான பில்கள் உருவாக்கி, கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக கவுன்சிலர்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளாக இதேபோல் பல விதங்களில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், கவுன்சிலர் கூட்டங்களில் தங்களை பேச வாய்ப்பு தரப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதனை கண்டித்து மற்றும் ஊழல் தொடர்பான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தலைவரும் செயல் அலுவலரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி,
இரு கவுன்சிலர்களும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்
நடத்த தீர்மானித்திருந்தனர்.

ஆனால், போராட்டத்தை தடுக்க போலீசார் திடீரென தலையிட்டு, போராட்டம் நடத்த வேண்டாம் என மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக நிர்வாகத்தின் அழுத்தத்திற்கேற்ப போலீசார் செயல் படுகிறார்களா என பொதுமக்களும் கேள்வி எழுப்பினர்.
போலீசார் தலையீட்டை கண்டித்த கவுன்சிலர்கள், வரும் 30ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துக்களையும் ஒன்றிணைத்து நீதிமன்ற அனுமதியுடன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் பகிரப்பட்டன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














Leave a Reply