Categories

அணுகு சாலை சான்றுக்கு ₹60,000 லஞ்சம்: BDO ஊராட்சி செயலாளர் கைது


ஒசூர் டிச 24,
ஒசூர் அருகே சூளகிரி பிடிஓ கார்த்திக்குமார், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் லஞ்ச ஒழிப்புப் போலீசில் சிக்கினர்

ஒசூர் அருகே சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி கிராமத்தில், ஒசூர் ஓல்டு டெம்பிளை சேர்ந்த வெங்கடேஷ், தனது மனைவி பெயரில் உள்ள 53 சென்ட் நிலத்திற்கு அணுகு சாலை சான்று பெற, 3 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக மருதாண்டப்பள்ளி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், சூளகிரி பிடிஓ கார்த்திக்குமார் ஆகியோர் அவரிடம் ₹60,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.



லஞ்சம் கொடுக்க மனமில்லாத வெங்கடேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் ( பொ ) தலைமையில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வெங்கடேஷ் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

சூளகிரி BDO அலுவலகத்தில் வெங்கடேஷ் பணத்தைக் கொடுக்க முயன்றபோது, BDO கார்த்திக்குமார், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.