Categories

100 நாள் வேலைத் திட்ட ஒழிப்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச 24,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பி.டி.ஓ.ஆபிஸ் முன்பு 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்ததை கண்டித்து அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் எம்.வி.டி., கோபால், கண்ண பெருமாள், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பெயர் மாற்றம் மற்றும் சட்டத்திருத்தம் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசின் மக்கள் விரோதச் சட்டத்தையும், அதற்கு துணைபோன அ.தி.மு.க.வையும் எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கண்டன கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்பழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், கௌரிதிருக்குமரன், தி.மு.க மற்றும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள்  தேர்தல் பிரதிநிதிகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.