Categories

எம்ஜிஆர் 38-வது நினைவு நாள் – சேலத்தில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு


சேலம் டிச 24,
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 38-வது நினைவு நாளை சேலத்தில் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன் விபரம் வருமாறு

ஏற்காடு சட்ட மன்ற உறுப்பினர் சித்ரா குணசேகரன் தலைமையில்:


அதிமுக நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 38வது நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை ரவுண்டானாவில், எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு, ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா குணசேகரன் தலைமையில், நினைவஞ்சலி மற்றும் மலர் அஞ்சலியை இன்று செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி துணை சேர்மன் பட்டாசு பாலு, உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு, எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் நினைவஞ்சலி செலுத்தினர்.



அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பாலு தலைமையில்



தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, எம்ஜிஆரின் 38-வது நினைவு நாள் அதிமுக  சேலம் மாநகர மாவட்டசெயலாளர் பாலு தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது‌. இந்த நிகழ்வில் சேலம் மாநகர அதிமுக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிங்காரம், முன்னாள் எம்எல்ஏக்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், பகுதி செயலாளர்கள் குமார், ரஞ்சித் குமார், பிரகாஷ் அப்பாதுரை, உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமான அதிமுகவின் கலந்துகொண்டு எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்.

செய்தி :- திரு.ராஜேந்திரன்

சேலம் மாவட்ட நிருபர் – 94870 22834