Categories

சேலத்தில் சாயப்பட்டறை நிறுவனம் பொது வழியை மூடி வைத்ததால் பரபரப்பு

சேலம் டிச 25,

சேலம் மாவட்டம் டால்மியா போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறை பகுதிக்குள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பொது வழி பாதை அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக பொது வழி பாதையை அங்கு செயல்பட்டு வரும் சாயப்பட்டறை நிறுவனம் மூடி வைத்துள்ளதால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்நிலையில்  200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பாதை மூடி வைத்திருந்த பகுதிக்குள் உள்ளே நுழைந்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த இந்த பொது பாதையை மூடக்கூடாது என்றும், இதுபோன்று தொடர் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டால் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களை சமாதானப் படுத்தியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.