Categories

மிட்டா மண்டகப்பட்டில் நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலை :



கண்டமங்கலம் : டிச-24,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் மிட்டா மண்டகப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட  கூட்டு சாலை
நான்கு முனை சந்திப்பில் இருந்து (100) மீட்டர் மிட்டா மண்டகப்பட்டு பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையில்  அருகில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது,



இதனை மிட்டா மண்டகப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரும், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் கண்டுகொள்ளவே இல்லை,

இதே நிலை நீடித்தால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பொதுமக்கள் யார் மீதாவது இடிந்து விழுந்து உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது,

இதனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் காலம் தாழ்த்தாமல் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகக் குழுவினர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்தப் பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் விழிப்புணர்வாக உள்ளது,