
சங்ககிரி டிச 25,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட நித்தியா அருண், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகளின் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். மேலும் தான் வெற்றி பெற்று வந்த பிறகு, லாரி உரிமையாளர்கள் பிரச்சனைக்கு நிரந்தரவு நிரந்தர தீர்வு காண முயற்சி செய்வதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.














Leave a Reply