
தர்மபுரி டிச 25,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான ஒகேனக்கல் பகுதிக்கு சென்ற வேன் இன்று கிறிஸ்மஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது.

அரூர் அருகே உள்ள மொண்டுகுழி கிராமத்தில் இருந்து ஒகேனக்கல் நோக்கி சென்ற அந்த வேன், வனப்பகுதி சாலையின் கடுமையான வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

முதல் கட்ட தகவலின்படி, விபத்தில் ஈடுபட்ட வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை அருகிலுள்ள ஆம்புலன்ஸ்கள் மூலம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்
வனப்பகுதி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் மற்செய்தி ஆசிரியர்றும் தீயணைப்பு படையினர் விபத்து இடத்தில் மீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி : செய்தி ஆசிரியர்,
உள்ளாட்சி அரசு நாளிதழ்













Leave a Reply