
தர்மபுரி டிச 25,
கிறிஸ்மஸ் விழாவில், திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முனைவர்
பி. பழனியப்பன் கலந்துகொண்டு கேக் வெட்டி விழாவைத் தொடங்கினார்.
சமத்துவத்தின் அடிப்படையில் அனைத்து சமூகங்களும் இணைந்து பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் எனும் திமுகவின் கொள்கையைப் பிரதிபலிக்கிறது.
அனைத்து மதங்கள், சமூகங்கள் சேர்ந்து இன்பமாகக் கொண்டாடும் இந்த விழா, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தியது.
முனைவர் பழனியப்பன் உரையில், “சமத்துவம் என்பது அனைவருக்கும் சம உரிமை. கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகள் எல்லோரையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். இந்தியாவின் சமாதர்மக் கொள்கைப்படி, அனைவரும் சமமாக இன்பமடைய வேண்டும்” என்று கூறினார்.
பங்கு மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் திமுகவின் முயற்சிகளின் ஒரு உதாரணமாக அமைந்தது. பங்கு தந்தைகள் உள்ளிட்ட பங்கு மக்கள், வரவேற்றனர்.
விழாவில் கிறிஸ்மஸ் பாடல்கள், நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்தி : செய்தி ஆசிரியர்
உள்ளாட்சி அரசு நாளிதழ்














Leave a Reply