
தர்மபுரி டிச 26,
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள தாளநத்தம் கிரிக்கெட் கிளப்பின் சார்பில்
முதல் முறையாக நடத்தப்படும் மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது.
இந்த போட்டியை தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர்
அ. சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

50.க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சேர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் இப்போட்டியில் களமிறங்குகின்றன.
பல்வேறு கிளப்புகளை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
முதல் நாள் போட்டிகள் நடைபெற்றதோடு, அடுத்த நாட்களில் முதல் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடக்கவுள்ளன.

இறுதிப் போட்டியில் வென்ற அணிக்கு ரூ.50,000 பரிசுடன்
சிறப்பு சுழற்சி கோப்பை வழங்கப்படும்.
முதல் அணிகளுக்கு சிறப்புப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
திராவிட மாடல் ஆட்சியின் விளையாட்டு சாதனைகள்
இப்போட்டி கிராம அளவிலான விளையாட்டு மேம்பாட்டிற்கும் இளைஞர்களுக்கு தளமாகவும் விளங்குகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழக அரசு மாநில மட்டுமல்லாமல் உலக அளவிலும் விளையாட்டுச் சாதனைகளைப் படைத்து வருவதாக பழனியப்பன் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
போட்டியைக் காண ஊர்மக்கள், கிரிக்கெட் வீரர்கள், உள்ளூர் தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தி: செய்தி ஆசிரியர் உள்ளாட்சி அரசு














Leave a Reply