Categories

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக விளையாட்டு போட்டிகளில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு



தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசு தொகைகள் ஆகியவற்றை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் வழங்கினார்.


திமுகவின் விளையாட்டு ஊக்கம்

தமிழக முதல்வர்
மு.க. ஸ்டாலின், தமிழர் பண்டிகையான பொங்கலை ‘திராவிட பொங்கல்’ பண்டிகையாகக் கொண்டாடுமாறு தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் ஒரு பகுதியாக, மாவட்டம் முதல் கிராம அளவ வரை பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தார்.



அதன்படி, துணை முதல்வர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் அறிவுறுத்தல்படி, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர்
பி. பழனியப்பன் முன்னின்று பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சட்டம்புறத் தொகுதிகளில் கபடி, கிரிக்கெட், கைப்பந்து, சிலம்பாட்டம், கோலப்போட்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றிய அளவில் தகுதி சுற்றுகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெறும் அணிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நீடித்த இந்தப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பரவலாகப் பங்கேற்று பயனடைந்தனர்.

மாணவர்களின் வரவேற்பு

மாணவ, மாணவியர் கூறுகையில், “இது போன்ற விளையாட்டு போட்டிகள் எங்கள் பகுதியில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளன. இவை உற்சாகத்தை அளித்து, மன அழுத்தத்தைக் குறைக்கின்றன.

எங்கள் திறமைகளை வெளியுலகிற்குக் காட்டும் நல்ல வாய்ப்பாக உள்ளன. ஆண்டுதோறும் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

தொடர் போட்டிகளால் மட்டுமே சிறந்த விளையாட்டு வீரர்கள் உருவாகலாம்” என பாராட்டினர்.

பரிசு வழங்கல் விழா


கிரிக்கெட், வாலிபால், சிலம்பம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில்
பி. பழனியப்பன் கோப்பைகள், பரிசு தொகைகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாவட்ட, மாநில, ஒன்றிய பொறுப்பாளர்கள், கட்சியினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர்.

-செய்தி ஆசிரியர்

உள்ளாட்சி அரசு நாளிதழ்