Categories

தருமபுரி மாவட்டத்தில் 28 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் வே.சரவணன் உத்தரவு

தருமபுரி, அக்.22-

தருமபுரி மாவட்டத்தில் நிர்வாக காரணங்களுக்காக 28 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பிறப்பித்துள்ளார்.

மாவட்டத்தின் பல்வேறு வட்டங்களில் பணியாற்றி வந்த துணை வட்டாட்சியர்கள், பணி நலன் கருதி வேறு வட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக புதிய இடத்தில் பணியில் சேர வேண்டும் என ஆட்சியர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.