
கோவை நவ 3,
கோவை மாவட்ட ஆட்சியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சுசி கலையரசன் மற்றும் மாநில பொறுப்பாளர் வழக்கறிஞர் அசோக் மணிமாறன் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தெருக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயர்களில் இருக்கும் ஜாதி பெயரை நீக்க வேண்டும் எனவும் அதேபோல் கோவை மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அரசு நியமனம் செய்யும் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என மனு அளித்தனர்.

இது குறித்து மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் சுசி கலையரசன் அளித்த பேட்டியில்:- கடந்த கால ஆட்சியில் தெருக்கள் மற்றும் தனி நிறுவனங்களில் உள்ள ஜாதி பெயரை நீக்க வேண்டும் என அரசாணை வெளியீடு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இன்று வழக்கறிஞர் அசோக் மாணிமாறன் மற்றும் இருகூர் ஜெகன் ஆகியோருடன் இணைந்து மனு வழங்கி உள்ளோம். அந்த மனுவில் குறிப்பாக தெருக்கள் பெயர்களுடன் “காலனி” என்ற பெயரையும் ,மேலும் உதாரணமாக கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி போன்ற நாயுடு என்ற அடைமொழி கொண்ட பெயர்களை நீக்க வேண்டும் என்றும் மனு அளித்துள்ளோம் என்ற கூறினார்.
வழக்கறிஞர் அசோக் மணிமாறன் பேசியதாவது:-
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதி திராவிடர் நலத்துறையில் அரசு நியமன பொறுப்புகளான ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் மற்றும் ஆதி திராவிடர் கண்காணிப்பு குழு உறுப்பினர் பதவிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்று மனு அளித்தாக தெரிவித்தார். குறிப்பாக கடந்த திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்ட தாகவும்,கடந்த ஆட்சி காலத்தில் அவரச கதியில் நியமனம் செய்யப்பட்ட குழுவை கலைத்து விட்டு புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். மேலும் தற்போது சமூக நீதித்துறை அமைச்சர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேர்த்த அண்ணன் வன்னியரசு உள்ளதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு நியமாக கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அப்போது இருகூர் ஜெகன் உடனிருந்தார்.












Leave a Reply