Categories

தி.மு.கவிடம் இருந்து தான் நாம் நாட்டை காக்க வேண்டும் கோவை சீமான் ஆவேசம்



கோவை அக் 26,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தார்.



நமது அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை பாதுகாக்க பெரிய, பெரிய கிடங்குகளை அமைத்து கண்காணித்து பாதுகாத்து வருகிறது.தார்பாய் கூட வாங்கி போடவில்லை. நீங்கள் கட்டும் சமாதிக்கு எவ்வளவு கோடி செலவு செய்து இருக்கிறீர்கள்.
தெருவில் போட்டு நெல்லை முளைக்கு வைப்பது தான் சாதனை.அரசுக்கு மக்களின் நலனை பற்றி கவலை எங்கு..? இருக்கிறது.ஒருநாள் பட்டினி கிடந்து சாகும் போது தெரியும்.கரூர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சார்ட்ட் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டுமா ? கள்ள சாராயத்தில் உயிரழந்தவர்கள் கொழுப்பெடுத்து இறந்தார்கள். அவர்களுக்கோ போய் பணம் கொடுக்கிறீங்க.கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி காலத்தில் சேமிப்பு கிடங்கு கட்டியிருந்தால் நெல் வீதியில் கிடைக்குமா ?இந்த ஆண்டு மட்டுமா ? வீதியில் கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கிடக்கிறது.வாக்களர் திருத்த பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை நான் வரவேற்கிறேன்.
கோவை தெற்கில்  வானதி வெற்றி பெற்ற 20 ஆயிரம் வாக்குகள் யாருடையது ?
தி.மு.க விடம் இருந்து தான் நாம் நாட்டை காக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசு மட்டும் ஒரு மசோதாவை சரியாக கொண்டு வருகிறதா ?ஊழல் லஞ்சம் ஒளிந்து இருந்தால் எதற்காக ஈ.டி, ஐ.டி ரெய்டு.தீவிரவாத்ததை ஒளித்து விட்டோம் என்கிறார்கள் அப்போது எதற்காக பகல்ஹாமில் தாக்குதல் நடந்தது.
அப்போது எங்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டீர்கள்.இதற்காக நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.நிறைவாக அடுத்த மாதம் நடக்கக்கூடிய தண்ணீர் மாநாடு தண்ணீரின் தேவை மற்றும் அத்தியாவசியம் குறித்து விவரித்து பேசி உள்ளார்.