
புதுச்சேரி அக் 27,
வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திரா மாநில கடற்கரைப் பகுதிகளில் மசிலிபபட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையில் காக்கிநாடா அருகே நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மோந்தா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாகியிருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.














Leave a Reply