
கண்ணகி நகர் என்றாலே குறைத்து மதிப்பிடும் போக்கு தான் இவ்வளவு காலம் இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த பகுதிக்கே உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறார் கண்ணகி நகர் கார்த்திகா – விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.தங்கம் பதக்கம் வென்றவர்களை கொண்டாடும் அளவிற்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்களை கொண்டாடுவதில்லை அதுவும் சாதனைதான்.

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியில் கபடி பிரிவில் தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த கார்த்திகா சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன்.
இந்திய அணியின் சார்பில் இளம் பெண்களுக்கான கபடி போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்து சாதனை புரிந்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு விசிக சார்பில் பாராட்டும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.அதேபோல் அவருக்கு பயிற்சியளித்த பயிற்சியாளருக்கும் பாராட்டி வாழ்த்துகிறோம். அவர் இன்னும் உலக அளவில் இது போன்றவற்றைகளை பெற வேண்டும் சாதனை புரிய வேண்டும்.
எளிய குடும்பத்தில் பிறந்து தாயின் அரவணைப்பிலிருந்து இந்த சாதனையை புரிந்துள்ள கார்த்திகா நான் பிறந்த கண்ணகி
நகருக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளேன் இது தான் எங்கள் அரசியல் என்று கூறியது பாராட்டுக்குரியது.
விளையாட்டு வீராங்கனையாக மட்டுமல்லாமல் அரசியல் புரிதல் அரசியல் தெளிவு உள்ளவராகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.
கண்ணகி நகர் என்றாலே குறைத்து மதிப்பிடும் போக்கு தான் இவ்வளவு காலம் இருந்தது.ஆனால் இப்பொழுது அந்த பகுதிக்கே உலகளவில் பெருமை சேர்த்திருக்கிறார்.
*தமிழக அரசு கார்த்திகாவுக்கு 25 லட்சம் ஊக்கத்தை கொடுத்திருப்பது வரவேற்தக்கது இருந்தாலும் அந்த ஊக்கத்தொகையை 1 கோடி ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று ஏற்கனே விசிக சார்பில் கோரிக்கைவைக்கபட்டது. அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.*
கார்த்திகாவுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் உறுதிப்படுத்தியிருக்கிறார் அந்த மகிழ்ச்சியளிக்கிறது.
அதே வேளையில் வெற்றி பெற்ற கார்த்திகாவுக்கும் அபினேஷிக்கும் இருவருக்குமே அரசு வீடு வழங்கக் வேண்டும்.
தனக்கு என்ன வேண்டும் என்ற கோரிக்கையை விட தான் இருக்கும் கண்ணகி நகரை உயர்த்த வேண்டும், குறிப்பாக உலகம் தரவாய்ந்த வேண்டும் கபடி விளையாட்டு மையத்தினம் வேண்டும் என்ற கார்த்திகா கோரிக்கை வைத்தது பறந்த பார்வை உயர்ந்த சிந்தனை உள்ளதை காண்பிக்கிறது..
மாவட்டம் தூரம் விளையாட்டு பயிற்சிக்கான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். ஊருக்கு ஊர் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடிய வகையில் அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
விளையாட்டில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் இரு பாலினத்தவரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
கார்த்திகாவின் வெற்றி நாட்டிற்கு பெருமை என்பதை விட இளைய தலைமுறையை உருவாக்குவதற்கு அவசியமானது. பள்ளிப்பருவத்தில் இருந்து மாணவ மாணவிகள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அதன் மூலம் உடல் வலிமையையும் மனவலிமையையும் பெற்ற புதிய இளைய தலைமுறையினரை உருவாக்க அரசு உதவி செய்ய வேண்டும்.
*20 ஆயிரம் அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லாமல் நிலை உள்ளது என்ற கேள்விக்கு.. ?*
*இந்த தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரமாக உள்ளது. இது குறித்து உரிய தகவலுடன் முதல்வர்,துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம்.*
முதல்வர் துணை முதல்வர் இருவருமே விளையாட்டில் விளையாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தனியார் பயிற்சியாளர்கள் அரசு பணி இல்லாமல் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் ராஜி போன்ற பயிற்சியாளர்கள் இதுபோன்ற குழுக்களை உருவாக்குகிறார்கள்.
எனவே தனிப் பயிற்சியாளர்களையும் அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவது அவர்களுக்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மிக முக்கியமானது.
அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல தனி பயிற்சி ஆள்களை ஊக்குவிப்பதும் அவசியமானது. எனவே முதல்வரின் கவனத்திற்கு இதனை எடுத்து செல்வோம்.
ஓட்டு வங்கிக்காக செல்ல முடியாத அரசியல்வாதிகள் கூட நேரடியாக கண்ணகி நகருக்கு சென்று வாழ்த்து தெரிவிக்கிறார்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் .?
அவர்கள் வாக்கு அரசியலுக்காக செயல்பட்டாலும் நாம் அதை அரசியல்படுத்த வேண்டாம்.
மத்திய அரசு பாரபட்சம் காட்டாமல் மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும் அப்போது தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்கும்.
ஒவ்வொரு விளையாட்டில் சாதனை புரிபவர்களுக்கு எவ்வளவு நிதி தரலாம் என அரசு ஒரு வரையறை செய்திருக்கிறது அந்த வரையறை தாண்டி கூட கூடுதலாக தருகிறார்கள். இந்த கபடி போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சாதனை பெறுபவர்களுக்கு 15 லட்சம் தரலாம் என்ற வரையறை உள்ளது ஆனால் 25 லட்சம் வழங்கியுள்ளோம் என்ற விளக்கத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.
*தங்கம் பதக்கம் வென்றவர்களை கொண்டாடும் அளவிற்கு வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்களை கொண்டாடுவதில்லை அதுவும் சாதனைதான்.*
தங்கப்பதக்கங்கள் வென்றவர்களை எப்பொழுதுமே தேசம் பாராட்டிக் கொண்டிருக்கிறது இதனை ஒப்பீடு செய்து அரசியலாக வேண்டாம்.
வரும் காலங்களில் கண்ணகி நகர் மக்களின் கோரிக்கைக்கு ஏற்றவாறு கண்ணகி நகர் வளர்ச்சிக்காக அடிப்படை என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை அறிந்து முதல்வர்கள் செய்து கொடுப்பார் என்பது நம்புகிறோம்.














Leave a Reply