Categories

தவெக பேனரை கிழித்தவர்களை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் நவ 9,
திருப்பூர் – பாண்டியன் நகரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கான பேனர் பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், அந்த பேனரை மர்மநபர்கள் சிலர் கிழித்துவிட்டனர். இந்நிலையில் நிகழ்ச்சிக்காக வந்த கட்சியின் மாவட்டத்தலைவர் பாலமுருகன் தலைமையில் பேனரை கிழித்தவர்களை கண்டித்தும், கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாண்டியன் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.