
கோவை நவ 8,
கோவை விளாங்குறிச்சி கஞ்சா போதையில் 2 நாய்க் குட்டிகளைக் கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது செய்தனர்.
கோவை, கணபதி, விளாங்குறிச்சி சாலையில் கஞ்சா போதையில் இருந்த ஒரு வாலிபர், 45 நாட்கள் மட்டுமே ஆன இரண்டு நாய்க் குட்டிகளை கொடூரமாகத் தாக்கி கொன்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், (Shock and Outrage) ஏற்படுத்தியது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது குறித்து சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விலங்குகள் வதை தடுப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு விளாங்குறிச்சி சாலை சிவதங்கம் நகரை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அங்கு சென்று அங்கு உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அதில் பதிவான காட்சிகளை கைப்பற்றி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜிஜூ விஷ்ணு என்பது தெரிய வந்தது. அவர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இரண்டு மாதமே ஆன நாய்க்குட்டிகளை கொடூரமாக கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.














Leave a Reply