
திருப்பூர் நவ 18,
SIR பதிவு படிவங்கள் BLO க்கள் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதில் ஆளுங்கட்சியான திமுகவினர் தலையிட்டு குளறுபடி செய்து கள்ள ஓட்டு பதிவு செய்ய முயல்வதை தடுக்க வேண்டும் என்று கோரி திருப்பூர் மாவட்ட அதிமுகவினரும் பாஜகவினரும் இணைந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ உள்ளிட்ட அதிமுகவினரும் பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பாஜகவினரும் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் SIR பதிவு படிவங்கள் BLO க்கள் மூலம் வழங்குவதில் ஆளுங்கட்சியான திமுகவினர் தலையிட்டு குளறுபடி செய்வதாக முறையிட்டு மனு அளித்தனர். அப்போது அவர்கள் திருப்பூர் மற்றும் காங்கயம் பகுதியில் BLO க்களை மிரட்டி படிவங்களை பெற்றுக் கொண்டு விநியோகம் செய்வதாகவும் இது கள்ள ஒட்டு பதிவு செய்ய வாய்ப்பாக இருப்பதாக உள்ளதாகவும், இந்த விஷயத்தில் ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர் அப்போது செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில்,
திருப்பூர் மாநகரில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஆளுங்ககட்சி தலையிடு காரணமாக வாக்குச்சாவடி அலுவலர்கள் மிரட்டப்பட்டு நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து அதுகுறித்து புகார் அளித்து இருக்கிறோம். குறிப்பாக சில பூத்களில் ஆளுங்கட்சி தலையீடு காரணமாக சரியாக செயல்படுவதில்லை .

குறிப்பாக கொங்கு நகரில் சில பூத்கள், சரிவர ஆய்வு செய்யாமல் ஆளுங்கட்சி வேண்டுகோள்படி மொத்தமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது, வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் சென்று வழங்கினார்கள், ஒருவருக்கு இரண்டு மூன்று இடங்களில் வாக்கு இருப்பது, இறந்தவர்கள் வாக்கை மீண்டும் உருவாக்கி ஆளுங்கட்சியான திமுகவுக்கு கள்ள ஓட்டுப்போட வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது, திருப்பு தெற்கு தொகுதியில் சாயப்பட்டறை வீதியில் 400 பேர் வடக்கு தொகுதிக்கு சென்று விட்டார்கள், அவர்களுக்கு 400 படிவங்கள் ஆளுங்கட்சி பிரதிநிதிகளிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது, காங்கயம் தொகுதியிலும் இது போல இறந்து போன சிலரது ஓட்டுகளுக்கு ஆளுங்கட்சி தூண்டுதல் படி BLO க்கள் படிவம் கொடுத்து இருக்கிறார்கள். இது குறித்து ஆட்சியரை சந்தித்து புகார் அளித்து உள்ளோம் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்துக்கு போவோம் என்றார். மேலும் வரும் தேர்தலில் நிச்சயமாக திமுக கள்ள ஓட்டு பதிவு செய்ய முடியாதபடி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். என்றும் கூறினார்.













Leave a Reply