Categories

அண்ணாமலையின் திடீர் வருகை – யுகாதி விழாவில் திமுக நிர்வாகிகள் வெளியேறிய பரபரப்பு

கோவை மார் 24,
கோவை நவ இந்தியா பகுதியில் கம்மவாநாயுடு சங்கம் சார்பில் யுகாதி பண்டிகை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன், துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழா நடைபெற்று கொண்டிருந்த நிலையில், அதே சங்கத்தில் உறுப்பினராக உள்ள பாஜக நிர்வாகி ஒருவரின் ஏற்பாட்டில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டார்.

அண்ணாமலையின் திடீர் வருகையை கண்டு மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் தொடர்ந்து  அனைவரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிச் சென்றதாக தகவல் கூறப்படும் நிலையில் இச்ச சம்பவத்தால்  அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது.