Categories

பாஜக நிர்வாகி அவமதிப்புச் சொல்  மாற்றுத்திறனாளிகள் அமைப்பு கண்டனம்



அரூர், டிசம்பர் 16:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகி ஜி.கே. நாகராஜ், நியூஸ் 18 தொலைக்காட்சியில் இன்று (செவ்வாய்) இரவு 8 மணியளவில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, “நொண்டி அடிப்பது போல்”, “நொண்டிகளைப் போல்” எனும் அவமதிக்கும் வகையிலான சொற்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாற்றுத்திறனாளிகளின் உரிமை மீட்பு குழு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் இந்த வகை கருத்துக்கள் இழிவானதும், அவர்களின் உணர்வுகளைத் துன்புறுத்துவதாகவும் உள்ளது. இப்படிப்பட்ட உரைகள் மனிதநேயமற்றதும், சமூகத்தில் வெறுப்பு மற்றும் பிளவை ஏற்படுத்தக்கூடியது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.