
கோவை நவ 18
கோவைக்கு வரும் மோடிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு அமைப்புகள் இணையதளங்களில் போஸ்டர் போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வானதி சீனிவாசன் மாநகர காவல் ஆணையரிடம் புகார்
பீகார் மக்களை தமிழர்கள் தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து வரும் மோடியை கண்டித்து, கோவை வரும் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்போவதாக முற்போக்கு அமைப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை , தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவித்தனர். இதனையடுத்து, வருகின்ற புதன்கிழமை காலை 11.30 மணிக்கு மசக்காளி பாளையம் சந்திப்பு அருகே, அவினாசி சாலையில் கருப்பு கொடி போராட்டத்தின் போஸ்டர்கள் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்து எம் எல் ஏ வானதி சீனிவாசன் மாநகர காவல் ஆணையருக்கு அறிக்கை வாயிலாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்
வருகிற 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ள இயற்கை வேளாண்மை மாநாட்டிற்காக வருகை தர உள்ளார். இந்நிலையில். பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டம் ஏற்பாடு செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, ‘முற்போக்கு அமைப்புகள் கோவை’ என்ற பெயரில் கோவையின் முக்கிய வீதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் மாண்புமிகு பாரதப் பிரதமரை அவமதிக்கும் விதமாக பொய்யான அவதூறு பரப்பும் வகையில் “பீகார் மக்களை தமிழர்கள் தாக்கியதாக வாசகம் இடம்பெற்றுள்ளது.
மேலும், அதில் மோடிக்கு கருப்புக் கொடி போராட்டம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு போஸ்டர் அல்லது சுவரொட்டி ஒட்டினாலும், சம்பந்தப்பட்ட அமைப்பு அல்லது நபரின் முகவரி தொடர்பு எண் ஆகியவற்றை இடம்பெறச் செய்யுமாறு கட்டாயப்படுத்தும் தமிழக காவல்துறை. இது போன்ற சுவரொட்டிகளை கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அண்மையில், துணை ஜனாதிபதி திரு சிபி ராதாகிருஷ்ணன் கோவைக்கு வருகை தந்தபோது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றது காவல்துறையின் பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டியது. இந்நிலையில், பிரதமர் வருகை தரும் இவ்வேளையில், இது போன்ற சுவரொட்டிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது கண்டனத்திற்குரியது.
எனவே, மாண்புமிகு பாரதப் பிரதமரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டும், அவரது நற்பெயருக்கும் ஆட்சிக்கும் சுலங்கம் விளைவிக்கும் வகையில் ஓட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை ஓட்டிய அமைப்பின் மீதும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.














Leave a Reply