
கரூர் நவ 1,
கரூரில் இரண்டாவது நாளாக நடைபெறும் சிபிஐ விசாரணை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட பகுதியில் 3d டிஜிட்டல் ஸ்கேனர் கருவி மூலம் அளவிடும் செய்யும் பணி தொடர்ந்து 2 நாட்களாக 15 மணி நேரமாக 700 மீட்டர் தூரம் நடைபெற்றது.
கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு
இது குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த இரண்டு வாரங்களாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நேற்று இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கி 2 நாட்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நேரில் விசாரணை தொடங்கினர்.
அப்போது வேலுச்சாமிபுரத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் டீ கடைகள், வணிக மற்றும் IT நிறுவனங்களில் உள்ள சிசிடிவி ஆதாரங்கள் சேகரிக்கும் பணி மற்றும் 3d டிஜிட்டல் ஸ்கேனர் கருவி மூலம் அளவிடும் பணி 700 மீட்டர் தூரம் நடைபெற்றது
தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் 3d டிஜிட்டல் ஸ்கேனர் கருவி உதவியுடன் அளவீடு செய்யும் பணி தற்பொழுது வரை 15 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட தவெக தலைவர் விஜய் நின்று பேசிய இடத்தில் அதிக நேரம் 3டி டிஜிட்டல் ஸ்கேனர் மூலமாக அளவீடு செய்யும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.
மேலும் 10 மீட்டருக்கு ஒரு முறை என்ற விதத்தில் ஐந்து நிமிடம் Faro foucus என்ற அதிநவீன 3d டிஜிட்டல் ஸ்கேனர் மூலமாக அளவீடு செய்யும் பணி அந்தப் பகுதியில் 3 பகுதிகளாக பிரித்து இடதுபுறம் சாலை, வலது புறம் சாலை, சென்டர் மீடியேட்டர் என அளவிடும் பணியானது 700 மீட்டர் தூரம் நடைபெற்று நிறைவடைந்தது.
அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது சீர் செய்யப்பட்டது.














Leave a Reply