Categories

கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின்  லேப்டாப்பை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி  காட்சி வைரல்.



கோவையில் ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின்  லேப்டாப்பை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி  காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் ஐ டி.பார்க்கில் பணிபுரியும் இரு பெண்கள் சுந்தராபுரம் – மதுக்கரை மார்கெட் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.காலை இருவரும் வெளியில் சென்று இருந்த நேரத்தில் இன்று  காலை  6.30 மணிக்கு அறைக்கு வந்த  மர்ம நபர் அறையின் வாசலில் நின்று ஐன்னல் வழியாக எட்டி பார்த்தார். பின்னர் அறைக்குள் நுழைத்து  அங்கிருந்த இரண்டு லேப்டாப்புகளை மர்ம நபர் திருடி சென்றார். மீண்டும் அறைக்கு திரும்பிய
ஐ.டி.ஊழியர்கள் லேப் டாப் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து, அங்கு பதிவாகியிருந்த  சிசிடிவி காட்சிகளை பார்த்தார். அப்போது லேப்டாப்பை மர்மநபர் திருடி செல்வது
பதிவாகி இருந்தது. இதனையடுத்து அவர்கள் சிசிடிவி காட்சிகளுடன்
கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.