
சேலம் டிச 25,
கிறிஸ்துவ மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்படுகின்ற, கிறிஸ்மஸ் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து சேலம் நான்கு ரோடு அருகே உள்ள, குழந்தை இயேசு பேராலயத்தில், சேலம் தேவாலயங்களில் பங்குத்தந்தை அருள் செல்வம் ராயப்பன் தலைமையில், சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, நள்ளிரவு சரியாக 12 மணி அளவில், இயேசு பிராவின் பிறப்பை, பங்குத் தந்தை அருள் செல்வம் ராயப்பன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேவாலயத்தின் முழுவதும் குழுமி இருந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள், தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் அல்லேலூயா அல்லேலூயா என்று கூறியவாறு வெளிப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000 திற்கும் மேற்பட்ட மக்கள், இயேசுகிறான் பிறப்பை கண்டு மகிழ்ந்தனர்.
செய்தி திரு.ராஜேந்திரன்
சேலம் மாவட்ட நிருபர் +91 94870 22834














Leave a Reply