Categories

செம்மொழி பூங்கா பணிகள் நிறைவு விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் அமைச்சர் நேரு கோவையில் பேட்டி

கோவை நவ 15,


கோவையில் செம்மொழி பூங்கா  பணிகளை ஆய்வு செய்த பின்னர் நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசுகையில் செம்மொழிப் பூங்காவை  திறக்க இந்த மாத இறுதியில் முதல்வர் வர இருக்கிறார்.செம்மொழி பூங்கா பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க சொல்லியிருக்கிறோம்.ஒரு வார காலத்திற்கு பணிகள் முடியும்.

இன்னும் இரண்டு முதல் மூன்று வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறது. மற்ற வேலைகள் அனைத்தும் முடிந்து இந்த மாத இறுதிக்குள் பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த மாத இறுதிக்குள் திறந்து விடுவார்கள்.
பிளே ஏரியா, வாட்டர் கார்டன், பெய்டு பே  ஏரியா உட்பட 4 பணிகள் இன்னும் முடியவில்லை அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.பூங்காவில் 23 பணிகளாக பிரிக்கப்பட்ட நிலையில் நான்கு பணிகள் மட்டும் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது.167.25  கோடி ரூபாய் ஏற்கனவே  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக  47 கோடி கொடுக்கப்பட்டு  214.25 கோடியில் பணிகள் நடப்பதாக தெரிவித்தார்.


செம்மொழி பூங்காவில் மரங்கள் வைக்க வில்லை என்ற கேள்விக்கு, பூங்காவில் அரிதான மரங்கள் நடப்பட்டுள்ளது. ரோஜாக்கள் மட்டுமே ஆயிரம் வகை ரோஜாக்கள் நடப்பட்டுள்ளது. உலகில் எங்கெங்கெல்லாம் இல்லாத பூக்கள்,செடிகள்  இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.மரம் நடப்பட்டுக் கொண்டிருக்கிறது விரைவில் வளர்ந்து விடும்.பாதாள சாக்கடை பணிகள் எங்கும் நிறுத்தப்படவில்லை.துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.
மீண்டும் துப்புரவு பணியாளர்கள் குறித்த கேள்வி எழுப்பவே,இன்று காலை கூட அவர்களுக்காக ஆறு திட்டங்களை  முதல்வர் அறிவித்து இருக்கிறார்.

17 லட்ச ரூபாயில் வீடு,3 வேளை சாப்பாடு, குழந்தைகள் படிப்பிற்கு மானியம் , மருத்துவ வசதி என அனைத்தும் கொடுத்து இருக்கிறது.அவர்களை கவனிக்காமல் இல்லை. பல இடங்களில் தனியார் மயப்படுத்தி இருக்கின்றனர். இது இந்திய அளவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு.பீகார் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என பாஜக என கூறுகின்றனரே  என்ற கேள்விக்கு,
பாஜக வேறு என்ன சொல்வார்கள் ?என பதில் அளித்த அவர் உண்மையில்  தேர்தலில் நாங்கள் தான் ஜெயிப்போம் , அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதிலளித்தார்.தமிழகத்தில் யாரும் ஓட்டு போட முடியாத நிலை வரும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருப்பது குறித்த கேள்விக்கு,இவ்வளவு பெரிய அரசாங்கம் இருக்கின்றது ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு ஆள் பி எல் ஓ போடப்பட்டு, 68,000 பேர் பணியாற்றுகின்றனர். 

BL2 தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் போடப்பட்டு இருக்கிறது. எல்லா இடத்திலும் நேரடியாக விண்ணப்பம் கொடுத்து 90% கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 17 ,18 நாட்கள் இருக்கிறது முதல்வரை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பேசி வருகின்றார்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. 2002இல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் , அந்த குடும்ப தலைவரின் பெயர் அடிப்படையில்  குடும்பத்தில் இருப்பவர்கள் அனைத்தும் சேர்ந்து கொள்ளலாம்.தவறு இல்லாமல் பூர்த்தி செய்து கொடுக்க சொல்லப்பட்டுள்ளது. புதியதாக சேர்ப்பவர்களுக்கு பார்ம் 6 கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த முப்பது நாள் வேலை முடிந்தவுடன் அடுத்த முப்பது நாள் சரிபார்க்கும் பணிகள் தான் இருக்கும். அதனால் ஓட்டு சேர்ப்பதற்கான எல்லா முயற்சியும் அரசு எடுத்துக் கொண்டு இருக்கிறது.கோவை சின்ன வேடம்பட்டி ஏரியில், கொண்டு வருவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இதுகுறித்து முதல்வரிடம் பேசி இதை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றார். நல்ல நீரை தேக்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்.கோவையில் 380 MLD தண்ணீர் ஒரு நாளைக்கு கொடுக்கிறோம் அந்த 380 எம்எல் டி யில் 10% ஆவியாதல் ஆகின்றது  85 சதவீதம் கழிநீராக மாறுகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து விவசாயத்துக்கும், பூங்காகளுக்கும்  பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது எனவும் தெரிவித்தார்.குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சென்னையில் துவங்கப்பட்டு விட்டது. அடுத்து கோவையில் துவங்கிவிடும். இது 25 ஆண்டு கால திட்டம். கோவை ,மதுரையிலும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.எஸ் ஐ ஆர் விண்ணப்பங்களை திமுகவினர் வாங்கி சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து கேள்விக்கு, BLO தான் இந்தப் படிவங்களை கொடுக்கின்றனர். BLO வீடு வீடாக சென்று கொடுத்து வருகின்றார், இதில் நாங்க எப்படி வாங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தான் எங்கள் வேலை அதை செய்கின்றோம். அவர்கள் ஒரு ஆளையும் போடாமல் கடைசி நேரத்தில் எங்களை குறை சொன்னால் எப்படி?

முதலில் 2 நாள் தேக்க நிலை இருந்தது. இப்பொழுது எல்லா மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கவனத்துடன் இருக்கின்றனர்.


தமிழகத்தில் திமுக , தவெக இடையேதான் போட்டி என்பதை திமுக மேடைகளிலேயே உறுதிபடுத்துவதாக தவெக தலைவர் விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, எந்த திமுக மேடையில் உறுதிபடுத்தி பேசி இருக்கிறோம் என கேள்வி எழுப்பினார்.
எந்த மேடையில் உறுதிப்படுத்தினோம் என்பதை அவரிடமே கேளுங்கள், எங்களிடம் ஏன் கேட்கின்றீர்கள் என பதிலளித்தார்.
திருப்பதிக்கு 44 லட்ச ரூபாய் நன்கொடை  கொடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு,என் குடும்பத்தில்   உறவினர்கள் கொடுத்தார்கள். எனக்கு தெரிந்து இருந்தால் வேண்டாம் என சொல்லி இருப்பேன் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.