Categories

கேஸ் தட்டுப்பாட்டால் கோவையில் கல்லூரி விடுமுறை !!!



கேஸ் தட்டுப்பாடு காரணமாக கோவையில் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், பல்வேறு உணவகங்களில் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இதன் இடையே கோவையில் குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கல்லூரி தரப்பில் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எல்.பி.ஜி (LPG) தட்டுப்பாடு காரணமாக விடுதி வசதி தற்காலிகமாக செயல்படாது. இதனால், விடுதியில் தங்கும் மாணவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஹாஸ்டலுக்கு வர தேவையில்லை.

மேலும், மார்ச் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெற உள்ள CIA-II தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், இணையவழியில் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. விடுதி மாணவர்கள் மற்றும் டே ஸ்காலர் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் பின்பற்றப்படும் என கூறப்பட்டு உள்ளது.

எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக உணவுத்துறை பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது கல்வித் துறையிலும் பாதிப்பு ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.