
தர்மபுரி டிச 24,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 45) இவரின் நண்பர் வாக்கன்கொட்டாயை கிராமத்தை சேர்ந்த மாது (வயது45) ஆகிய இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை எலுமிச்சனஅள்ளி அருகில் உள்ள வனப்பகுதியில் 10 அவிட்டுகாய் எனப்படும் நாட்டுவெடிகுண்டுகளை கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட ஆங்காங்கே மண்ணில் புதைத்து விட்டு சென்றுள்ளனர்.

பின்பு நேற்று காலை வனவிலங்குகள் நாட்டு வெடியால் இறந்துள்ளதா என்பதை பார்க்க சேட்டு வனப்பகுதிக்கு வந்த போது ரோந்து பணியில் இருந்த பாலக்கோடு வனச்சரக பணியாளர்கள் சேட்டுவை விசாரித்து கையும் களவுமாகப் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 10 நாட்டு வெடி குண்டுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.














Leave a Reply