
நீலகிரி அக் 30,
நீலகிரி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் தனியார் தேயிலை தோட்டத்தின் இரும்பு கேட்டில் புள்ளிமான் தலை சிக்கியதால் மான் பரிதவித்தது .
வயநாடு மாவட்டம் முழுவதும் அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை காப்பி தோட்டங்கள் உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் காபி தேயிலை தோட்டங்களில் அதிகமாக உலா வருகின்றன.
இந்த நிலையில் மேப்பாடி பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தின் இரும்பு கேட்டில் புள்ளிமான் சிக்கி இருந்ததை பணியாளர்கள் பார்த்தனர்.
கொம்புடன் தலையும் சிக்கிக் கொண்டதால் வீட்டில் இருந்து தப்பிக்க புள்ளிமான் நீண்ட நேரம் போராடியது இந்த காட்சிகளை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர் அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.














Leave a Reply