Categories

கோவையில் SIRயை கண்டித்து தவெகவினர் ஆர்ப்பாட்டம்



கோவை நவ 16,
தவெகவை  சார்ந்தவர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை எனவும்,  பல இடங்களில் தவெக வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்க படுவதாகவும்
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.



கோவை தெற்கு வட்டாச்சியர்
அலுவலகம் முன்பு
SIR  குளறுபடிகளைக் கண்டித்து தவெக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையில் நடத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ,
500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
மாநில அளவில்
எஸ் ஐ ஆர் க்கு எதிரான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும், எஸ் ஐ ஆர் என்பது கண்டிப்பாக அவசியம்,  ஆனால் தேர்தல் நேரத்தில் ஏன் அவசரமாக செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதைத் தவறில்லாமல் செய்ய வேண்டும் என தெரிவித்த அவர, தமிழகத்தில் 6.4 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்,
பி எல் ஓக்கள் எப்படி ஒரு மாதத்தில் மூன்று முறை நேரில் சென்று அவர்கள் பகுதியை பார்க்க முடியும் எனவும்
அரசுப்பணி வேலையை பார்த்துவிட்டு blo வேலையையும் எப்படி  ஊழியர்களால் பார்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
ஊழியர்களும்
Blo பற்றி பெரிய புரிதல் இல்லாமல் தான் இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
தவெக ஆதரவாளர்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வாக்காளர் படிவங்கள் கொடுக்கப்படவில்லை,
இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
நியாயமான சந்தேகங்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை,
இவ்வளவு அவசரமாக ஏன் செய்ய வேண்டும் பொறுமையாக அடுத்த ஆண்டு செய்யலாமே எனவும் அருண்ராஜ் தெரிவித்தார்.

இந்த வாக்காளர் பட்டியலை வைத்துத்தான் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல்  சரியாக நடக்கவில்லையா? என தெரிவித்தார். எஸ்.ஐ ஆ பணிகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர்களின் வாக்குகளை உறுதி செய்வது மட்டுமின்றி அருகில் இருப்பவர்கள் அனைவரின் வாக்குகளையும் உறுதி செய்து கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பீகாரில் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, பின்னர் சிலரை சேர்த்திருக்கின்றனர்,
அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது எனவும், தேர்தலுக்கு முன்பு பல திட்டங்கள் அறிவித்தார்கள், குறிப்பாக அங்கு பெண்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பிஎல்ஓ பின்னால் திமுகவினர் செல்கின்றனர், தவெக கட்சிக்காரர்கள் சென்றால் அவர்களை அனுமதிப்பது இல்லை என தெரிவித்த அவர்,
பீகாரில் எஸ் ஐ ஆர் அறிவித்த பொழுது தமிழக வெற்றி கழகம்தான்  முதலில் எதிர்ப்பு தெரிவித்தது எனவும் தெரிவித்தார்.
கொள்கை ரீதியாக நாங்கள் எஸ் ஐ ஆர் எதிர்க்கிறோம் என தெரிவித்த அவர்
தமிழக வெற்றி கழகம் இந்த முறை தான் போட்டியிடுகிறது,
கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை என்பது இனிமேல் தான் தெரியும் எனவும்
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து இருப்பீர்கள் எனவும் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் கூட்டணி இருக்குமா என்பதை தலைவர் தக்க நேரத்தில் முடிவு செய்வார் என தெரிவித்த அவர்,
முதல் மாநாட்டில் சொன்ன நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை எனவும்,
பாஜகவை தவிர்த்து கூட்டணிக்கு மற்ற கட்சிகளை வந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் தெரிவித்தார்.


தமிழ்நாடு வேறு மற்ற மாநிலங்கள் வேறு என தெரிவித்த அவர்,  இங்கு  தலைவருக்கு கரிஷ்மா வேண்டும், மக்கள் ஆதரவு பெற்ற ஒரு தலைவர் இருக்க வேண்டும்,  அப்படிப்பட்ட தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் மட்டும்தான் இருக்கிறார்,
அனைத்து மக்களுக்கும் அன்பு காட்டக்கூடிய தலைவராக தமிழக வெற்றிக் கழக தலைவர் மட்டும் இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

எஸ்ஐஆரை அரசியலுக்காக எதிர்க்கவில்லை, படிவம்  கொடுக்கும் பொழுது தமிழக வெற்றி கழகத்தை சார்ந்தவர்களுக்கு விண்ணப்பங்கள் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், பல இடங்களில் தமிழக வெற்றிக்கழக வாக்காளர்களுக்கு வாக்குரிமை கிடைக்காமல் தடுக்கும் திட்டமும் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் ஏன் அவசரகதியில் இதை கொண்டு வர வேண்டும் எனவும், நியாயமான வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது ,
ஒரு வாக்காளர் கூட நீக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்தார்.
தவெக சார்பில் அனைத்து பூத்துகளுக்கும் ஆட்கள் போடப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது பணிகள் நடந்து வருகின்றது எனவும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.


*